நள்ளிரவு தொடங்கி BUDI MADANI RON95 திட்டம் அமல்!

கோலாலம்பூர்:

பூடி மடானி ரோன் 95 எனும் இலக்கிடப்பட்ட பெட்ரோல் திட்டம் நாலை நள்ளிரவு 12 மணி தொடங்கி செயல்படுத்தப்படுகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற மலேசியர்கள் 1 லிட்டர் ரோன் 95 ரக பெட்ரோலை 1 ரிங்கிட் 99 காசு விலைக்கு வாங்கலாம். அதிலும் இந்த திட்டத்தில் சுமார் 16 மில்லியன் மலேசியர்கள் பயனடைவர் என கணக்கிடப்படுகிறது.
இந்த விலையானது தற்போதைய இலக்கிடப்பட்ட விலையை அதாவது 2 ரிங்கிட் 5 காசை விட 6 சென் மலிவாகும்.

இந்த பூடி மடானி திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற மலேசியர் ஒவ்வொரும் ஒரு மாதத்தில் தலா 300 லிட்டர் ரோன் 95 ரக பெட்ரோலை வாங்க அனுமதி வழங்கப்படுகின்றது.

இந்த திட்டத்தின் மூலம் அந்த எரிபொருள் விநியோகத்தில் முறைகேடுகள், கடத்தல் நடவடிக்கைகள் களையப்படுகின்றன.

இந்நிலையில் முன்னதா இந்த திட்டம் போலீஸ், இராணுவ படையினர் மத்தியில் இம்மாதம் 27ஆம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள இந்த பூடி மடானி திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here