காணாமல்போன மூதாட்டியின் சடலம் கால்வாயில் மிதந்தது !

ஜித்ரா:

நேற்று தொடங்கி காணமல் போனதாக நம்பப்படும் மூதாட்டியின் சடலம் இன்று கம்போங் பீடா 12 லாமா, ஜாலான் சங்லாங் பகுதியில் உள்ள தமது வீட்டின் முன்புறம் பெரிய கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது.

கால்வாயில் மிதந்த அந்த 88 வயது மூதாட்டியின் சடலம் குறித்து தீயணைப்பு- மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அச்சடலத்தை மேலே கொண்டு வந்தனர்.

மதியம் 1.45 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து மீட்பு படையினர் அந்த மூதாட்டியின் சடலத்தை மேலே கொண்டு வந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்காக போலீஸ் தரப்பிடம் ஒப்படைத்தனர் என்று ஜித்ரா தீயணைப்பு நிலைய தலைவர் நோர் அஸார் தஜூடின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here