நினைத்தது நிறைவேற தீபம்

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும். அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்காக பலரும் பலவிதமான தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் பொழுது ஒரு சில சூட்சமமான வழிமுறைகளை நாம் பின்பற்றினோம் என்றால் அதன் விளைவால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட சூட்சமமான ஒன்றாக கருதப்படுவது தான் நவகிரகங்கள். எந்த ஒரு வேண்டுதல் நமக்கு நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த வேண்டுதலுக்குரிய கிரகம் எது என்பதை கண்டறிந்து அதற்கேற்றார் போல் வழிபாடு செய்யும்பொழுது நாம் நினைத்தது நடக்கும். அந்த வகையில் தான் இந்த தீப வழிபாடும் திகழ்கிறது.
வாரத்தில் இருக்கக்கூடிய ஏழு நாட்களும் நவகிரகங்களில் இருக்கக்கூடிய ஏழு கிரகங்களை குறிக்கக்கூடியது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கின்றன. அந்த குணாதிசயங்களை பொறுத்து நம்முடைய வேண்டுதல் என்ன என்பதை தேர்வு செய்து எந்த கிரகம் அந்த வேண்டுதலுக்குரிய கிரகம் என்பதை உணர்ந்து அந்த கிரகத்திற்குரிய கிழமையில் அந்த கிரகத்திற்குரிய ஹோரையில் நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.
உதாரணமாக வேலை தொடர்பான காரியங்களுக்கு சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும் என்றால் சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமை  காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வேலை தொடர்பான வேண்டுதலை முன்வைத்து வழிபாடு செய்ய அந்த வேண்டுதல் விரைவில் நிறைவேறும். இப்படி வேண்டுதலை வைக்கும் பொழுது கண்டிப்பான முறையில் தீபத்தை ஏற்றுவோம் அல்லவா? அப்படி ஏற்றக்கூடிய தீபத்திலும் சூட்சுமமான ஒரு விஷயம் இருக்கிறது.
சாதாரணமாக பலரும் பலவிதமான எண்ணெய்களை பயன்படுத்தி தீபம் ஏற்றும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் நம்முடைய கர்ம வினைகள் தீருவதற்காக பயன்படுத்தக்கூடிய எண்ணையாக தான் நல்லெண்ணெய் திகழ்கிறது. இந்த நல்லெண்ணெயுடன் சந்தனாதி தைலம் என்று கூறக்கூடிய தைலத்தையும் சேர்த்து நாம் தீபம் ஏற்ற அந்த தீபத்திலிருந்து வரக்கூடிய மணமானது நேர்மறை ஆற்றலை அதிகரித்து நம்முடைய வேண்டுதலை இறைவனிடம் கொண்டு சேர்க்கும். அதன் மூலம் நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.
இதற்காக ஒரே ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கில் தேவையான அளவு நல்லெண்ணையை ஊற்றி அதனுடன் ஒரே ஒரு ஸ்பூன் அளவிற்கு சந்தனாதி தைலத்தையும் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீப சுடரொளியை பார்த்தவாறு உங்களுடைய வேண்டுதலை முன்வைக்க வேண்டும். இந்த தீபமானது மற்ற தீபங்கள் எரியும் நேரம் அளவு எரிந்தால் போதும். ஒவ்வொரு வேண்டுதலுக்கும் அந்த வேண்டுதலுக்குரிய கிரகத்திற்குரிய நாளில் நாம் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். தினமும் இந்த தீபத்தை ஏற்றலாம். அப்படி ஏற்றும் பட்சத்தில் தினமும் இந்த அகல் விளக்கை சுத்தம் செய்து புதிதாக என்னை திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தெய்வங்களுக்கு சாற்றக்கூடிய இந்த எண்ணையை பயன்படுத்தி நம்முடைய வீட்டில் நாம் தீபம் ஏற்றும் பொழுது அந்த தெய்வத்தின் பரிபூரணமான அருளை நம்மால் எளிதில் பெற முடியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here