சமூக வலை தளங்களில் அவதூறு; எழுவருக்கு தடுப்பு காவல்

கோலாலம்பூர்,

அரசாங்கம், தலைவர்களுக்கு எதிராக கிண்ட, அவதூறுகள் குறிப்பாக சமூக வலைத்தளா கருத்துப் பதிவேற்றங்களை பகிர்ந்தது தொடர்பில் போலீசார் 7 உள்நாட்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

அவர்கள் கடந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கி நேற்று வரை இடைப்பட்ட காலத்தில் இந்த செயலை புரிந்துள்ளனர்.

விசாரணைக்காக அந்த எழுவரும் ஒன்றிலிருந்து 3 நாட்கள் வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு பிரிவு இயக்குனர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.
குறிப்பாக அதில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆடவருக்கு போதைப் பொருள் தொடர்புடைய 19 குற்ற பின்புலன் உள்ளன.

அதே சமயம் 60 வயது மதிக்கத்தக்க மற்றொரு ஆடவர் மீது 2012 பொது பேரணி சட்டத்தின் கீழ் ஏற்கெனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் 6 சம்பவங்கள் அரசாங்கம், தலைவர்களுக்கு எதிரான டிக் டாக் பதிவுகள் ஆகும் அதில் ஒன்று பூடி மடானி ரோன் 95 திட்டம் குறித்ததாகும்.

மேலும் ஒரு சம்பவம் குறிப்பிட்ட தரப்பை தாக்கிய பேஸ்புக் பதிவாகும். எனவே பொது அமைதிக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய அவதூறுகள், கிண்டல்- கேலிகளுக்கு சமூக தள பக்கங்களை மக்கள் தவறாக பயன்படுத்த வேண்டாம்.

அப்படி செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் குமார் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here