எமதர்ம ராஜனை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாக இரண் இரண்டு நாட்கள் திகழ்கின்றது. அவற்றில் ஒன்றாக புரட்டாசி மாதத்தில் வருகிற மகாளய பட்சத்தில் வரும் மகாபாரணி நாளென்றும், மற்றொன்று ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்கும் முன்பாக வரக்கூடிய தியோதசி நாளன்றும் தான் எமதர்ம ராஜரை வழிபாடு செய்யும் வழக்கத்தை நாம் வைத்திருக்கிறோம் இந்த எமதர்ம ராஜரின் வழிபாட்டை யார் ஒருவர் முறையாக செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் துர்மரணம் ஏற்படுவது முற்றிலும் நின்றுவிடும். முன்னோர்களின் தோஷமும் சாபமும் நீங்கி ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.
எமதர்மராஜனின் அருளை பெற தீபம் ஒருவருடைய உயிரை படைக்க கூடியவராக பிரம்ம தேவர் இருந்தாலும் அந்த உயிரை எடுப்பதற்குரிய முழுமையான அதிகாரத்தை பெற்றவர் எமதர்மராஜர் என்று நம் அனைவருக்குமே தெரியும். நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையிலும் பாவக்கணக்கின் அடிப்படையிலும் நாம் இறந்த பிறகு நமக்கு சொர்க்கமா நரகமா என்பதை நிர்ணயிக்கக் கூடியவராகவும் இவர் திகழ்கிறார்.
மேலும் ஒருவருடைய கர்ம வினை பொறுத்து அவருக்கு நல்ல மரணம் ஏற்பட வேண்டுமா அல்லது துர் மரணம் ஏற்பட வேண்டுமா என்று கூட நிர்ணயிப்பதுண்டு. இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த எமதர்ம ராஜனை நாம் வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.இந்த எம தீபத்தை அக்டோபர் மாதம் 18ம் தேதி சனிக்கிழமை மாலை 5:49 மணியிலிருந்து இரவு 7:5 மணிக்குள் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை வீட்டிற்குள் ஏற்றக்கூடாது. வீட்டிற்கு வெளியே தான் ஏற்ற வேண்டும். அதுவும் உயரமாக இருக்கக்கூடிய இடத்தில் தான் ஏற்ற வேண்டும். உயரமாக இருக்கக்கூடிய இடம் இல்லை என்னும் பட்சத்தில் சிறிது செங்கல் மற்றும் மணலை பயன்படுத்தி மேடாக்கி அதற்கு மேல் வைத்துதான் தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை அகல்விளக்கில் தான் ஏற்ற வேண்டும். நல்லெண்ணெய் ஊற்றி தான் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை விளக்கிற்கு முன்பாக நின்று ஏற்றக்கூடாது விளக்கிற்கு பின்புறமாக நின்று தான் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை ஏற்றக்கூடிய நபர்கள் தங்கள் உடன் பிறந்தவர்களுக்கு எந்தவித துரோகமும் செய்யாமல் அவர்களுக்கு உரியவற்றை கொடுத்து வாழ்பவராக இருந்தால் தான் இந்த பலனை முழுமையாக பெற முடியும். இல்லையேல் இந்த தீபத்தினால் அவர்களுக்கு பிரச்சனைகளை உண்டாகும். இப்படி நாம் ஏற்றிய இந்த எம தீபத்திற்கு பயன்படுத்திய எந்த பொருட்களையும் திரும்பவும் வீட்டிற்குள் கொண்டு வர கூடாது. எவ்வளவு நேரம் இந்த தீபம் இருக்கிறதோ அவ்வளவு நேரம் தீபம் எரியட்டும் மறுநாள் காலை அந்த அகல் விளக்கை அப்படியே எடுத்து அப்புறப்படுத்தி விட வேண்டும்.
எமதர்ம ராஜனின் அருளை பெறுவதற்கும் எமதர்ம ராஜனால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்குவதற்கும் இறந்த முன்னோர்களின் அருளை பெறுவதற்கும் குடும்பத்தில் எந்தவித துர்மரணமும் ஏற்படாமல் இருப்பதற்கும் இந்த ஒரு தீபத்தை சரியான முறையில் ஏற்றி முழு பலனையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.





















