மலேசியா உயர் தொழில்நுட்ப முதலீடுகளுக்காக ஆசியான் எல்லைகளைத் தாண்டி வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டும்-பிரதமர் அன்வார்

(ராமேஸ்வரி ராஜா)

மலேசியா உயர் தொழில்நுட்ப முதலீடுகளுக்காக
ஆசியான் எல்லைகளைத் தாண்டி வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டும் நமது டிஜிட்டல் மாற்றம், சமூதாயத்தின் அனைத்து துறைகளுக்கும் பயன் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என பிரதமர் அன்வார் வலியுறுத்தினார். 

சைபர்ஜெயா, 

மலேசியா, அரைக்கடத்தி (semiconductor), டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளில் உலகம் முழுவதும் இருந்து முதலீடுகளை ஈர்த்துக்கொண்டு, தனது வர்த்தக உறவுகளை ஆசியான் பிராந்தியத்தைத் தாண்டி விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசியா தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி வர்த்தக நாடுகளில் ஒன்றாக போட்டித்திறனுடன் நிலைக்க வேண்டும் என்றால், உலகளாவிய பொருளாதாரங்களுடன் உறவுகளை பலப்படுத்துவது மிக அவசியம். டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி திசை ஆசியானில் மட்டுமல்லாமல், அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து நகர வேண்டும் என்றார் அவர்.

மலேசியா தொடர்ந்து சரியான ஊக்கங்கள் மற்றும் ஏற்றச் சூழலை வழங்க வேண்டும். நமது டிஜிட்டல் மாற்றம், சமூதாயத்தின் அனைத்து துறைகளுக்கும் பயன் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என நேற்று சைபர்ஜெயாவில் நடைபெற்ற Malaysia Semi- conductor IC Design Park 2 விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துப் பேசிய அன்வார் கேட்டுக்கொண்டார்.

ஆசியான் ஒத்துழைப்பு முக்கியமானது. ஆனால், டிஜிட்டல் மாற்றத்தை வேகப்படுத்த நாம் தொழில்நுட்ப முன்னேற்றமும் வலுவான சந்தைகளும் கொண்ட நாடுகளுடன் வலுவான பிணைப்பை உருவாக்க வேண்டும். அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்துவது முக்கியம் என அன்வார் வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் மின்சாரம், மின்னணுவியல் (E and E), semiconductor தேவைகளில் சுமார் 25 விழுக்காடு மலேசியாவிலிருந்து பெறப்படுவதாகவும் இதன் வர்த்தக மதிப்பு சுமார் 200 பில்லியன் ரிங்கிட் என்றும் அன்வார் மேலும் கூறினார்.

அதே நிகழ்ச்சியில், மலேசியாவின் முழுமையான அரைக்கடத்தி வளையமைப்பை (ecosystem) உருவாக்குவதற்கான முக்கிய ஊக்கியாக விளங்கும் Advanced Chip Test- ing Centre-ஐ பிரதமர் அன்வார் திறந்து வைத்தார்.
இதற்கு முன் உரையாற்றிய சிலாங்கூர் மாநில மந்திரி பேசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மலேசியாவின் இரண்டாவது மையமாக, சைபர்ஜெயாவில் Malaysia Semicon- ductor IC Design Park (IC Park 2) அதிகாரப்பூர்வமாக பிரதமரால் தொடங்கப்பட்டது. இது தென்கிழக்கு ஆசியாவின் முதல் ‘முன்னேற்றப்பட்ட சிப் பரிசோதனை மையம்’ (Ad- vanced Chip Testing Centre) எனத் தெரிவித்தார்.

மேலும் இது, சிப் வடிவமைப்பு, பரிசோதனையில் மலேசியாவை முன்னணி நாடாக மாற்றும் முக்கிய கட்டமாகும். இந்த புதிய மையம் Advanced Chip Testing Centre ASEM ஆகிய வசதிகளுடன் இயங்கும். மேலும், 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் Selangor Semiconductor Fund தொடங்கி, உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட உள்ளன. Semiconductor தொழில் வளர்ச்சியில் முக்கியமான மைல்கல்லாக இது இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதில் Arm, Synopsys, AWS, Keysight, Tektronix, Cadence, IIT Madras போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன. இந்தப் புதிய மையத்தில் Advanced Chip Inspection ஆகியவற்றுடன் Metrology, Prototype, ரோபோட்டிக்ஸ், ஆராய்ச்சி (Research), பயிற்சி மையங்கள் (Training Centres) ஆகிய நான்கு முக்கியப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், Advanced Semiconductor Malaysia Academy (ASEM) மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 Semiconductor பொறியாளர்கள் (Jurutera semikonduktor) உருவாக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

சிலாங்கூர் அரசு, Sidec, PNSB, Artem Venture Fund ஆகியவையுடன் இணைந்து உருவாக்கிய Selangor Semiconductor Fund 100 மில்லியன் நிதியுடன் தொடங்கப்படுகிறது. இந்த நிதி, உயர் திறன் கொண்ட மலேசிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதலீடு செய்யும்.

அத்துடன், Local Economy Development Policy (LED) மூலம் புதிய தரவு மைய (Data Centre) முதலீடுகளில் குறைந்தது 30 விழுக்காடு உள்ளூர் பங்களிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here