நீரில் மூழ்கிய மாணவர் உயிரிழப்பு

கோலாலம்பூர்:

அண்மையில் சுங்கை பீசி, டேசா தாசேக் விளையாட்டு வளாக நீச்சல் குளத்தில் நடைபெற்ற தன்னம்பிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 11 வயது மாணவன் நீரில் மூழ்கியதாக நம்பப்படுகின்றது.

அந்த மாணவர் பண்டார் தாசேக் செலாத்தான் தேசிய ஆரம்பப்பள்ளியில் பயின்றவர் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சூஸ் தெரிவித்தார்.

முன்னதாக புதன்கிழை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த மாணவர் சுய நினைவின்றி காணப்பட்டதை அடுத்து போலீஸ் தரப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து அந்த மாணவருக்கு மலேசிய தேசிய பல்கலைக்கழக துவான்கு முஹ்ரிஸ் வேந்தர் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் நேற்று பிற்பலல் 2.30 மணியளவில் உயிரிழந்தார். அதே சமயம் அவரின் மரணத்திற்காக காரணத்தை கண்டறிய போலீஸ் விசாரணை தொடரப்படுவதாக ஃபாடில் மர்சூஸ் தமதறிக்கையில் விவரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here