கோத்தா கினாபாலு:
சபா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய யாங் டி-பெர்துவா நெகிரி துன் மூசா அமானின் மகன், சிந்துமின் (Sindumin) தொகுதியில் போட்டியிட இருப்பதாக PKR உறுதி செய்துள்ளது.
முன்னாள் ஸிபிதாங்க் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ யாமானி ஹாபிஸ் மூசா, சபாவின் 17வது மாநிலத் தேர்தலில் போட்டியிட உள்ள பிகேஆர் வேட்பாளர்களில் ஒருவர் என்று, PKR தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
இதனுடன், இநானாம் தொகுதி தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பெட்டோ காலிம் மற்றும் முன்னாள் புத்தாத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் ஹுசைனி சஹாரி ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவாங் ஹுசைனி, பெட்டாகாஸ் (Petagas) தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
முன்னாள் ஸ்ரீ பெலன்சோங்கன் (Sri Pelancongan) தலைமை செயல் அதிகாரி தொன்னி சீ (Thonny Chee), அப்பி-அப்பி (Api-Api) தொகுதியை PKR சார்பில் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஸ்ரீ கிறிஸ்டினா லியூ இந்த முறை மாற்றப்பட்டுள்ளார்.
முன்னாள் ககாசன் ரக்கியாத் சபா (Gagasan Rakyat Sabah) தலைவர்கள் டத்தோ ஜமாவி ஜாஃபர் மற்றும் டத்தோ ஜார்ஜ் ஹியூ ஆகியோர் முறையே மெலலாப் (Melalap) மற்றும் கரமுண்டிங் (Karamunting) தொகுதிகளில் போட்டியிடவுள்ளனர்.
ஜமாவி முன்னர் கெமபோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், ஹியூ தற்போதைய கரமுண்டிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையில், பல மத்திய அமைச்சுக்களில் செயலாளர் நாயகராக பணியாற்றிய அனுபவமுள்ள புதிய முகம் டத்தோரூஜி உபி (Ruji Ubi), மெரோதை (Merotai) தொகுதியில் போட்டியிட உள்ளார்.
மற்ற வேட்பாளர்கள்:
•முன்னாள் ஆசிரியர் ருஃபினா பெங்கரன் – துலிட் (Tulid)
•அப்துல் சயித் பிம்பிங் – கம்-கம் (Gum-Gum)
•ரோமன்சா லாமின் – சேகாமா (Segama)
வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் PKR துணைத் தலைவர் நுருல் இஷா அன்வர் மற்றும் சபா PKR தலைவர் டத்தோ முஸ்தபா ஸக்முட் ஆகியோர் கலந்து கொண்டனர்.




















