தவறு செய்தது மகனாக இருந்தாலும் ஜோ பைடன் மன்னிக்க மாட்டார்; வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இவருடைய மகன் ஹன்டர் பைடன். கடந்த 2018ஆம் ஆண்டு கைத்துப்பாக்கி ஒன்றை வாங்கும்போது, போதைபொருள் பயன்பாடு பற்றி பொய் கூறினார் என ஹன்டர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. போதையின் பாதிப்பில் இருந்தபோது, அவர் ஆயுதம் வாங்கியுள்ளார் என்றும், குண்டு நிரப்பப்படாத துப்பாக்கியை 11 நாட்கள் வரை ஹன்டர் தன்வசம் வைத்திருந்துள்ளார் என்றும் அவர் மீது சட்டவிரோத குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஹன்டர் மீது உள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட கூடும்.

இதற்கு பதிலளித்த பியர்ரே, இந்த கேள்விக்கு முன்பே நான் பதில் அளித்து உள்ளேன். 2 வாரங்களுக்கு முன்பே கேட்கப்பட்டு இருந்தது. என்னுடைய பதிலை அளித்து இருந்தேன். அதில் இல்லை என்று உறுதியாக தெரிவித்து இருந்தேன் என கூறியுள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலம் இருந்து வருகிறது. இதனால், வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை துப்பாக்கி வைத்திருக்கின்றனர். துப்பாக்கி சூடு நடத்தி அவ்வப்போது பொதுமக்களில் பலர் பலியாகி வருகின்றனர். இதற்கு பைடன் கண்டனம் தெரிவித்து வருகிறார்.

இதனால், கடுமையான சட்டம் இயற்றவும் முயற்சி நடந்து வருகிறது. இந்நிலையில், துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் ஹன்டர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், மகனே ஆனாலும் பைடன் மன்னிக்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here