துளசியை மகாவிஷ்ணு மணம் புரியக்கூடிய நாளாக தான் துளசி திருக்கல்யாண நாள் திகழ்கிறது. அன்று பலரும் தங்களுடைய இல்லத்தில் இருக்கக்கூடிய துளசி மாடத்திற்கு மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொள்வார்கள். பிறகு கிருஷ்ணரின் சிலை படம் இருக்கும் பட்சத்தில் அதை அருகில் வைத்தோ அல்லது நெல்லி மர குச்சியை அருகில் வைத்தோ திருக்கல்யாணம் நடத்துவார்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்களின் குடும்பத்திற்கு அளவில்லாத நன்மைகள் உண்டாகும். ஒருவேளை திருக்கல்யாணம் செய்ய இயலவில்லை என்பவர்கள் அந்த அளவில்லா பலனை பெறுவதற்கு செய்ய வேண்டிய எளிமையான வழிபாட்டு முறையை இப்பொழுது பார்ப்போம்.
திருக்கல்யாண வழிபாட்டை செய்பவர்கள் அசைவத்தை தவிர்க்க வேண்டும். இந்த வழிபாட்டிற்கு கண்டிப்பாக முறையில் துளசி செடி அல்லது துளசி இலை வேண்டும். அதைப்போல் மகாவிஷ்ணுவின் அம்சம் பொருந்திய சாலிகிராமக்கல், சங்கு போன்ற ஏதாவது ஒன்று வேண்டும்.
வீட்டில் துளசி செடி இருக்கும் பட்சத்தில் அந்த துளசி செடியை சுத்தம் செய்து துளசி மாடத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பச்சரிசி மாவினால் கோலம் போட்டு அருகிலேயே மகாவிஷ்ணுவின் அம்சம் பொருந்திய சாலிகிராமக்கல் அல்லது சாலிகிராமக்கல் அல்லது சங்கை வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். ஒருவேளை வீட்டில் சாலிகிராமக்கல், சங்கு இல்லை என்பவர்கள் ஒரு முழு நெல்லிக்காயை கூட மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதி வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். துளசி செடி இல்லாதவர்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தட்டில் துளசி இலைகளை பரப்பி அதற்கு மேல் மகாவிஷ்ணு அம்சம் பொருந்திய பொருளை வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம்.
இந்த வழிபாட்டை தொடங்குவதற்கு முன்பாக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பிள்ளையாருக்கு வாசனை மிகுந்த மலர்களை வைத்து வழிபாட்டை தொடங்க வேண்டும். துளசி செடிக்கு முன்பாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பின்வரும் இந்த மந்திரத்தை 9 முறை கூறி வாசனை மிகுந்த மலர்களால் துளசி செடிக்கும் துளசி செடிக்கு அருகில் இருக்கக்கூடிய மகாவிஷ்ணுவின் அம்சம் பொருந்திய பொருளுக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.