தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக மருத்துவர் பாலசந்திரன் நியமனம்

கோப்பெங்- சாந்தி ராஜன் (ஜூன் 13)-:  பத்துகாஜா, கிந்தா கிளாஸ் தோட்டத்தில் பிறந்த மருத்துவர் பாலசந்திரன் கோபாலின்  சேவையை அங்கீகரித்து அவருக்குப் புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் செனட்டர் டத்தோஸ்ரீ தி லியன் கேர் தனது சிறப்பு அதிகாரியாக இவரை நியமனம் செய்துள்ளார்.

சமூக ஆர்வலர் மருத்துவர் பாலசந்திரனின் பதவி உறுதிக் கடிதம் மே 27 தேதியிடப்பட்டு அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

துணை அமைச்சரின் தனிப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக செயலாற்றுகையில், பி40 தரப்பு பட்டியலில் இருக்கும் இந்திய சமூக நலன் நடவடிக்கைகளை துணை அமைச்சர் மேற்கொள்ளும்போது அவருக்கு உதவியாக இருப்பார் என்று நம்பிக்கை  பிறந்துள்ளது.

நியமனம் மே 27ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மருத்துவர் பாலசந்திரன், தம் மீது நம்பிக்கை கொண்டு பதவி வழங்கிய துணை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

மக்கள் சேவையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். என் சேவைக்கு கிடைத்த ஓர் அங்கீகாரம் என்று அவர் வர்ணித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here