மூடா கட்சித் தேர்தல்: மத்திய செயற்குழு இடத்திற்குப் போட்டியிடும் லெபன் சித்தார்த்!

கோலாலம்பூர் | மார்ச் 10, 2026:

மூடா (MUDA) கட்சியின் தகவல் தொடர்பு பிரிவுத் தலைவரான லெபன் சித்தார்த், வரவிருக்கும் கட்சித் தேர்தலில் அதன் மத்திய செயற்குழு (CEC) இடத்திற்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று உச்சத்தில் இருந்த 2020-ஆம் ஆண்டில் ஒரு தன்னார்வலராக லெபன் மூடா கட்சியில் இணைந்தார்.

கட்சியின் ஆரம்பக்காலத்தில் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டார். குறிப்பாக, ‘ஜோம் லாரி’ (Jom Lari) என்ற மெய்நிகர் ஓட்டப்பந்தயத் திட்டத்தின் மூலம் நிதி திரட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்.

ஊடகத் தொடர்பு குழுத் தலைவர், தேசிய தகவல் தொடர்பு பிரிவின் தலைமை அதிகாரி மற்றும் மத்திய செயற்குழுவின் தகவல் தொடர்புத் தலைவர் எனப் பல பொறுப்புகளை வகித்த பிறகு, 2023-ல் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவுத் தலைவரானார்.

மூடா கட்சியின் உள்கட்சித் தேர்தல் வரும் மார்ச் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here