மின்சாரக் கட்டமைப்புகளிலிருந்து விலகி இருங்கள்: பொதுமக்களுக்கு TNB எச்சரிக்கை

ஈப்போ, மார்ச் 17, 2026:

மின் கம்பங்கள், கேபிள்கள் மற்றும் மின் இணைப்புகள் போன்ற மின்சாரக் கட்டமைப்புகள் உயிருக்கு ஆபத்தானவை என்பதால், பொதுமக்கள் அவற்றைத் தொடவோ அல்லது சேதப்படுத்தவோ வேண்டாம் என்று தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) எச்சரித்துள்ளது.

மின்சாரக் கட்டமைப்புகளில் அத்துமீறுவது அல்லது அவற்றைச் சேதப்படுத்துவது சட்டவிரோதமானது மட்டுமல்லாமல், அது கடுமையான மின்சார அதிர்ச்சியை (Electric Shock) ஏற்படுத்தக்கூடும். இது உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும் என்று TNB சுட்டிக்காட்டியுள்ளது.

மின்சார விநியோகக் கட்டமைப்புகள் மற்றும் துணை மின் நிலையங்களுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்ககுமாறும், மின்சாரக் கட்டமைப்புகளுக்கு அருகில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தெரிந்தால், உடனடியாக அதிகாரிகளிடமோ அல்லது TNB-விடமோ புகாரளிக்கவும்.

தேவையற்ற விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று, TNB அறிவுறுத்தியுள்ளது.

நேற்று இங்குள்ள ‘தாமான் ராப்பா முத்தியாரா’ (Taman Rapat Mutiara) அருகே மின்சாரக் கட்டமைப்பில் கேபிள்களைத் திருட முயன்றதாகக் கருதப்படும் மூன்று ஆண்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் எரிசக்தி ஆணையம் (Energy Commission) மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு TNB முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here