மலேசியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கோலாலம்பூர் | 29 மார்ச் 2026

மலேசியாவின் தீபகற்பப் பகுதிகள், சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் பல இடங்களில் இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகள்: 1. தீபகற்ப மலேசியா: பினாங்கு: தென்மேற்கு, வடகிழக்கு மற்றும் செபராங் பிறை உத்தாரா பகுதிகள் மற்றும் பேராக்கின் பத்தாங் பாடாங் மற்றும் முவாலிம், பகாங்கின் கேமரன் ஹய்லண்ட்ஸ், ரவூப் மற்றும் ரொம்பின் மற்றும் ஜோகூரின் சிகாமாட், குளுவாங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்கள் அடங்கும்

இவை தவிர சரவாக்கின் கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான் மற்றும் பெத்தோங் (சாராத்தோக் & காபோங்) , சரிக்கேய், சிபு மற்றும் கபிட் மற்றும் மூக்கா (தஞ்சோங் மானிஸ், தாரோ & மாத்து), பிந்துலு (தாதாவ்) மற்றும் லிம்பாங் என்பனவும் இந்த வானிலையை எதிர்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சபாவின் உட்பகுதி: சிபித்தாங், தெனோம், பியூஃபோர்ட் மற்றும் நபாவான். மற்றும் மேற்குக் கரை: பாப்பார், புத்தாத்தான், பெனாம்பாங், கோத்தா கினபாலு, துவாரான் மற்றும் கோத்தா பெலுட். அத்தோடு தாவாவ் மற்றும் லகாட் டத்து பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here