தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் குறைந்தது RM1,992 ரொக்கமாக வைத்திருக்க வேண்டும்

பெட்டாலிங் ஜெயா:

தாய்லாந்திற்குள் நுழைய சுற்றுலாப் பயணிகள் குறைந்தது RM1,992 ரொக்கப் பணத்தைக் கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாங்காக்கில் உள்ள இந்தோனேசிய தூதரகத்திற்கான அமைச்சின் ஆலோசகர் டெவி லெஸ்டாரி இந்தோனேசிய நெட்வொர்க் RRIக்கு அளித்த பேட்டியில், சுற்றுலாப்பயணிகளுக்கான புதிய கட்டுப்பாட்டின்படி தாய்லாந்திற்குள் வரும் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் THB15,000 அல்லது சுமார் RM1,992 கையில் வைத்திருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தினார்.

பல இந்தோனேசியர்கள் தாய்லாந்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது குறித்து தூதரகத்திற்கு புகார் அளித்துள்ளதாக டெவி லெஸ்டாரி தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தார்.

தூதரகத்தின் கூற்றுப்படி,சுற்றுலாப் பயணிகளின் கடப்பிதழ் குறைந்தபட்ச செல்லுபடியாகும் காலம் ஆறு மாதங்களை கொண்டிருக்க வேண்டும், அத்தோடு அவர்கள் நாடு திரும்புவதற்கான டிக்கெட்டின் சான்று மற்றும் தங்குமிடத்திற்கான சான்று ஆகியவற்றைக் காட்ட வேண்டும்.

இறுதியாக, அவர்கள் தாய்லாந்தில் தங்கியிருக்கும் போது அவர்கள் செலவு செய்வதற்கான நிதித் திறனை கொண்டிருப்பதையும் அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றார்.

“தாய்லாந்து குடிவரவு குறிப்பாக பார்வையாளர்கள் எவ்வளவு பணம் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிடவில்லை, ஆனால் குத்து மதிப்பாக ஒரு நபர் குறைந்தது 15,000-20,000 பாத் ,” என்று அவர் கூறினார்.

குறித்த நிபந்தனைகளுக்குள் யாரேனும் சுற்றுலாப்பயணி இணங்கத் தவறினால் குடிநுழைவுச் சட்டத்தை மீறுவதாக அர்த்தம் B .A . 2522 (1979), மற்றும் குடிநுழைவு அதிகாரிகள் தாய்லாந்திற்குள் குறித்த சுற்றுலாப் பயணி நுழைவதைத் தடுபதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

இந்த விதி உலகெங்கிலும் உள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும், ஆனால் அனைவருக்கும் செயல்படுத்தப்படாது. குடிநுழைவு அதிகாரிகள் சில சமயங்களில் திடீர் சோதனையை மேற்கொள்வார்கள், இருப்பினும் சுற்றுலா பயணிகள் தாய்லாந்திற்குள் நுழைவதை உறுதிசெய்வதற்கு அந்த நாட்டுச் சுற்றுலாக் கொள்கைக்கு இணங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here