நாட்டில் மீண்டும் தேசிய பாதுகாப்பு சேவையைத் தொடங்குவது குறித்து ஆலோசனை

கோலாலம்பூர்:

ளையர்களுக்கான 45 நாள் அடிப்படை தேசிய சேவைத் திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்து மலேசியா ஆலோசித்து வருவதாக தற்காப்பு அமைச்சர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைகளில் இது அடங்கும் என்று ஹசான் கூறினார்.

“இம்முறை திட்டத்தை ராணுவ முகாம்களில் நடத்துவது குறித்து பரிசீலிக்கிறோம். திட்டத்துக்கு உகந்த பல வட்டார ராணுவ முகாம்கள் இருப்பது இதற்குக் காரணம்,” என்றார் அவர்.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு ஹசான் பதிலளித்தார்.

இத்திட்டம் முதலில் 20004ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்கீழ் 18 வயதான இளையர்கள் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் மூன்று மாத கால ராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டனர்.

பின்னர் 2015ஆம் ஆண்டில் திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு மறு ஆண்டு அது மீண்டும் தொடங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டுக்குள் திட்டத்தில் பங்கேற்பது கட்டாயமல்ல என்று அறிவிக்கப்படவிருந்தது.

ஆனால், 2018 ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டது.

புதிய வடிவில் திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசிக்க தற்காப்பு அமைச்சர், குழு ஒன்றைத் தொடங்குவதற்கு மலேசியாவின் முன்னைய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

முன்பு நடப்பில் இருந்த திட்டம் கோடை கால விடுமுறை முகாமைப் போல் இருந்தது; மாற்றியமைக்கப்படும் புதிய திட்டமோ யதார்த்தக்கு உகந்த வகையில் ராணுவப் பயிற்சியை இளையர்களுக்கு வழங்குவதை மையமாகக் கொண்டிருக்கும் என்று ஹசான் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here