மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: குவைத் விமான நிலையம் மீது ஈரானிய ட்ரோன் தாக்குதல்!

குவைத் | ஏப்ரல் 1, 2026:

த்திய கிழக்கில் நிலவும் மோதல் முற்றியுள்ள நிலையில், குவைத் அனைத்துலக விமான நிலையத்தின் மீது ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகள் இன்று (புதன்கிழமை) அதிரடி ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளன.

குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் அப்துல்லா அல்-ரஜி விடுத்துள்ள தகவலின்படி, விமான நிலைய வளாகத்திலுள்ள பிரம்மாண்ட எரிபொருள் சேகரிப்புக் கலன்கள் (Fuel Tanks) இலக்கு வைக்கப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ட்ரோன்கள் மோதியதில் எரிபொருள் கலன்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி, அந்தப் பகுதி முழுவதும் கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர்.

குவைத் மட்டுமின்றி, சவூதி அரேபியா, பஹ்ரேன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிலும் இன்று தனித்தனியாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஏமனிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையைத் தங்களின் ஆகாயத் தற்காப்பு முறைகள் (Air Defence Systems) வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ‘ஹூதி’ (Houthi) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

விண்ணிலேயே ஏவுகணை தடுத்து நிறுத்தப்பட்டதால், இஸ்ரேலில் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சொத்துச் சேதங்களோ ஏற்படவில்லை என ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த திங்கட்கிழமை (மார்ச் 30) ஏமனிலிருந்து வந்த இரண்டு ட்ரோன்களை இஸ்ரேல் முறியடித்த நிலையில், இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் நேரடித் தலையீடும், அதன் ஆதரவுப் படைகளின் தொடர் தாக்குதல்களும் அரபு நாடுகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here