மலேசியப் பொதுத்தேர்தல்: 2028 வரை தள்ளிப்போக வாய்ப்பு? தற்போதைய அரசியல் நிலவரம் ஒரு பார்வை!

கோலாலம்பூர்:

மலேசியாவில் இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நாட்டின் தற்போதைய அரசியல் நகர்வுகளை வைத்துப் பார்க்கும்போது, அடுத்த பொதுத்தேர்தல் 2028-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் அன்வார் இப்ராகிம், தனது ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பெருநிறுவனக் கும்பல்களையும், ஊழல் பின்னணிகளையும் வேரறுப்பதில் தீவிரமாக உள்ளார்.

குறிப்பாக பெரு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவது ஒருபுறம் சலசலப்பை ஏற்படுத்தினாலும், ஊழலை ஒழிப்பதில் பிரதமர் உறுதியாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

அத்தோடு எதிர்க்கட்சிகளிடையே நிலவும் பிளவு, அன்வார் தலைமையிலான நிர்வாகத்திற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
எழும் சவால்களும் விமர்சனங்களும்
ஆட்சி பலமாக இருந்தாலும், சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் MACC தலைவர் அஸாம் பாக்கியின் பதவிக்காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது மற்றும் அவர் மீதான சில குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் விவாதங்களை எழுப்பியுள்ளன.

கடந்த பிப்ரவரியில் ‘புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பொதுத்தேர்தல் 2028-இல் என்று கணிக்கப்பட்டாலும், சில மாநிலத் தேர்தல்கள் இதில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்:

• ஜோகூர்: இவ்வாண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் மாநிலத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

• மலாக்கா: 2027-ஆம் ஆண்டு இறுதியில் இங்குத் தேர்தல் வரவுள்ளது.
இந்த மாநிலத் தேர்தல்களின் முடிவுகளைப் பொறுத்தே, பொதுத்தேர்தல் குறித்த இறுதி முடிவை அரசாங்கம் எடுக்கக்கூடும் எனத் தெரிகிறது. இருப்பினும், மற்ற கட்சிகளைவிடப் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி சிறப்பாகச் செயல்படுவதாகக் கருதும் அதன் நிர்வாகிகள், மக்களின் ஆதரவு மீண்டும் தங்களுக்கே கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here