ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவர் நியமனம்: மாமன்னருடன் பிரதமர் ஆலோசனை!

கோலாலம்பூர்:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) புதிய தலைமை ஆணையரை நியமிப்பது குறித்துப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று காலை ஜோகூர், இஸ்தானா பாசிர் பெலாங்கியில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களைச் சந்தித்து ஆலோனை நடத்தினார்.

பெர்மாஸ் ஜெயா பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், இச்சந்திப்பின் போது தகுதியான வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், விரைவில் புதிய தலைவரின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுப்பதில் இப்பதவி மிக முக்கியமானது என்பதால், சிறந்த ஒருவரைத் தாமே நேரில் தேர்ந்தெடுக்கப்போவதாக மாமன்னர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தகுதியான வேட்பாளர்கள் குறித்துப் பிரதமர் நகைச்சுவையாகப் பதிலளித்த போதிலும், நாட்டின் முக்கிய அமைப்பான SPRM-ஐ வழிநடத்தப்போகும் அந்தப் புதிய அதிகாரி யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here