லஹாட் டத்துவில் 10,000 லிட்டர் டீசல் கடத்தல் முறியடிப்பு: லோரி மற்றும் எரிபொருள் பறிமுதல்!

கோலாலம்பூர்:

பா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான லஹாட் டத்துவில், மானிய விலையிலான 10,000 லிட்டர் டீசலைக் கடத்த முயன்ற கும்பலின் முயற்சியைக் கடல்சார் போலீசார் (Marine Police) முறியடித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான லோரி ஒன்றின் நடமாட்டத்தைக் கண்காணித்த போலீசார், நேற்று (ஏப்ரல் 23) ‘ஜாலான் பாரிஸ் 3’ (Jalan Paris 3) பகுதியில் வைத்து அந்த வாகனத்தை மறித்துச் சோதனையிட்டனர் என்று
சபா பிராந்தியம் 4-இன் கடல்சார் போலீஸ் படைத் தளபதி அசிஸ்டண்ட் கமிஷனர் அமாட் அம்ரி அப்துல் ரஹ்மான் கூறினார்,

சோதனையின் போது, அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து (Depots) வழங்கப்பட வேண்டிய அதிகாரப்பூர்வ ஸ்டிக்கர்கள் அந்த லாரியில் ஒட்டப்படவில்லை. இது அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மேலும், அந்த டீசல் எங்கே கொண்டு செல்லப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கான எவ்வித விநியோக ஆவணங்களையும் (Delivery Documents) ஓட்டுநரால் சமர்ப்பிக்க முடியவில்லை.

அந்த லோரியில் இருந்த சுமார் 10,000 லிட்டர் டீசல் மற்றும் டேங்கர் லோரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போதைய எரிபொருள் விலையின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட டீசலின் மொத்த மதிப்பு 51,200 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஒரு உள்ளூர் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த டீசல் அண்டை நாட்டிற்குப் பெரும் லாபத்திற்காகக் கடத்தப்படவிருந்ததாகப் போலீசார் நம்புகின்றனர். இந்த வழக்கு 1961-ஆம் ஆண்டு வழங்கல் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மானிய விலையிலான பொருட்களைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மற்றும் கடத்தல் கும்பல்களுக்கு எதிராகக் ‘ஒப்ஸ் திரிஸ்’ (Ops Tiris) நடவடிக்கை தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here