ரவாங் பள்ளி மாணவர்களின் சண்டை வீடியோ: விசாரணைக்கு சிலாங்கூர் கல்வித் துறை முழு ஒத்துழைப்பு!

கோலாலம்பூர்:

வாங்கில் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டு மாணவர்கள் சண்டையிடும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த போலீஸ் விசாரணைக்குச் சிலாங்கூர் கல்வித் துறை (Selangor Education Department) முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைப் பாதிக்கும் எந்தவொரு ஒழுங்கீன நடவடிக்கைகளிலும் கல்வித் துறை ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தற்போதைய விதிமுறைகளின்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்று, கல்வித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதால், பொதுமக்கள் இந்த விசாரணைக்கு மதிப்பளித்து நடக்குமாறு கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here