கோலாலம்பூர்:
கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் நாட்டின் எட்டு மாநிலங்களில் இன்று பிற்பகல் 3.00 மணி வரை இடியுடன் கூடிய கனமழையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கெடா, பேராக், சிலாங்கூர், பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களின் குறிப்பிட்ட மாவட்டங்கள் மற்றும் பினாங்கு மாநிலம் முழுவதிலும் இந்த மோசமான வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் வெள்ளப்பெருக்கும், மரங்கள் முறிந்து விழும் அபாயமும் இருப்பதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கூடுதல் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




















