இலங்கையை அச்சுறுத்தும் டிங்கி; 80,000 பேர் பாதிப்பு- 47 பேர் மரணம்

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் டிங்கி காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டிங்கி கட்டுப்பாட்டுப் பிரிவு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

அங்கு நிலவிவரும் ஈரப்பதமான காலநிலை காரணமாக டிங்கி பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதாகவும், தற்போது டிங்கி பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது என்றும், டிசம்பரில் மட்டும் இதுவரை 3,704 பேருக்கு டிங்கி பாதிப்பு பதிவாகியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிறு காலை நிலவரப்படி மொத்தம் 80,192 பேருக்கு டிங்கி காய்ச்சல் நோய் பதிவாகியுள்ளது. மற்றும் 47 பேர் இதுவரை டிங்கி காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர் என்றும் தேசிய டிங்கி கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here