‘மெட்ராஸ்காரன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை,நடிகர் ஷேன் நிகாம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான படம் ‘மெட்ராஸ்காரன்’.வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆஹா தளத்தில் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here