ஜோகூர் :
மலேசியா-சிங்கப்பூர் இடையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஜோகூரிள்ள சுல்தான் இஸ்கந்தர் சுங்கத்துறை, குடிநுழைவு, சோதனைச்சாவடியில் கூடுலாக 26 மின்நுழைவாயில்கள் இம்மாதம் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாகப் பொருத்தப்படும் மின்நுழைவாயில்கள் இம்மாதம் 19ஆம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்கும் என்று ஜோகூர் மாநிலத்தின் பொதுப் பணி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுவின் தலைவர் முகமட் ஃபஸ்லி முகமட் சாலே தெரிவித்தார்.
புதிய மின்நுழைவாயில்களுடன் சேர்த்து மலேசியாவுக்குள் வருபவர்களுக்காக மொத்தம் 39 மின்நுழைவாயில்கள் இருக்கும் என்றும் மலேசியாவிலிருந்து புறப்பட்டுச் செல்வோருக்காக 29 மின்நுழைவாயில்கள் இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
























