பிகேஆர் உதவித் தலைவர் பதவிக்கு டத்தோஶ்ரீ ரமணன் போட்டி

 சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சருனான டத்தோ ஆர். ரமணன், கட்சியின் வரவிருக்கும் தேர்தல்களில் பிகேஆர் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்ததாக ரமணன் கூறினார்.

அடிமட்டத்திலிருந்து மத்திய தலைமை வரை அனைத்து மட்டங்களிலும் பிகேஆரை வலுப்படுத்தி அதிகாரம் அளிப்பதே எனது குறிக்கோள் என்று அவர் பேஸ்புக்கில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். நமது போராட்டத்தின் உணர்வு மலேசிய மடானி நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போக வேண்டும். ஒன்றாக, நமது நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்ததை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.

2022 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு துணைத் தலைவர்கள் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதீன் ஷரி, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுதீன் ஹருன், மத்திய அமைச்சர்கள் நிக் நஸ்மி நிக் அகமது, சாங் லி காங். நால்வரும் தங்கள் நிலைப்பாடுகளைப் பாதுகாப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

முன்னாள் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா அன்வார், பிகேஆர் தகவல் தலைவர் ஃபஹ்மி ஃபட்சில் ஆகியோர் களத்தில் இறங்கியிருக்கும் பிற தலைவர்களாவர். ன்குழு உறுப்பினர்கள் மற்றும் பிரிவு மட்டத்தில் பெண்கள் மற்றும் இளைஞர் பிரிவுத் தலைவர்களுக்கான தேர்தல்கள் ஏப்ரல் 11 முதல் 20 வரை நடைபெறும். மத்திய தலைமைத்துவக் குழு, மகளிர், இளைஞர் பிரிவுகளின் தேசியத் தலைவர்களுக்கான தேர்தல்கள் மே 24 அன்று நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here