அக்டோபரில் நடைபெறும் 47வது ASEAN மாநாடு; இது மலேசியாவின் முக்கியத்துவத்தை உலகளவில் வலியுறுத்தும் ஒரு அரிய வாய்ப்பாகும்,” – பிரதமர்

புத்ரஜெயா,

இந்த ஆண்டு அக்டோபரில் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47வது ஆசியான் உச்சி மாநாட்டில் ஆசியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் இருந்து பல உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

புத்ரஜெயாவில் இன்று நடைபெற்ற பிரதமர் துறை ஊழியர்களுடன் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்த மாநாட்டை மலேசியா மிக முக்கியமான பன்னாட்டு நிகழ்வாக நடத்த தயாராகிவரும் நிலையில், உலகத்தின் பல பிராந்தியங்களில் இருந்து உயர்மட்டத் தலைவர்கள் வருகை தருவதை வரவேற்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறினார்.

“இது மலேசியாவின் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான முக்கியத்துவத்தை உலகளவில் வலியுறுத்தும் ஒரு அரிய வாய்ப்பாகும்,” என்றார். இந்த மாநாட்டில் பிராந்திய கூட்டுறவு, பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற தலைப்புகள் விரிவாக விவாதிக்கப்பட உள்ளன என்கிறார் அவர்.

மலேசியா இந்த மாநாட்டை நடத்துவதன் மூலம் ஆசியாவின் முக்கிய தூதுவனாக தனது நிலையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here