காற்று தூய்மைக்கேடு குறியீடு 200-ஐ தாண்டினால் இயங்கலையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- கல்வி அமைச்சர்

கோலாலம்பூர்:

காற்று தூய்மைக்கேடு குறியீடு 200-ஐ தாண்டும்போது இயற்பியல் கற்றல் கற்பித்தல் முறை செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்தது.

இது தொடர்பில், கல்வி அமைச்சு ஏற்கனவே வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளதோடு, அவை அனைத்துப் பள்ளிகளுக்கும் நடப்பில் உள்ள செயல்பாட்டு தர விதிமுறைக்கு பொருந்தும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.

“எனவே, வழிகாட்டுதல்கள் படி காற்று தூய்மைக்கேடு குறியீடு 100-க்கும் அதிகமாக இருந்தால் வெளிப்புற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது மற்றும் 200-க்கு மேல் இருந்தால் இணையம் வழி கற்றல் கற்பித்தல் நடைபெறும்,” என்றார் அவர்.

கோலாலம்பூரில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான இலக்கவியல் பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப விருது விழாவிற்குப் பிறகு அவர் இவ்வாறு விளக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here