பாலேக் பூலாவ்:
அண்மையில் கம்போங் கெந்திங்கில் நடைபெற்ற தன்முனைப்பு முகாமில் 4 மாணவர்களை மானபங்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பகுதிநேர வழிகாட்டி முகவருக்கு தடுப்பு காவலை நீட்டிக்க இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதித்தது.
2017 சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 14(a) கீழ் விசாரணைக்கு உதவும் வகையில் 33 வயதான அந்த ஆடவருக்கு இம்மாதம் 25ஆம் தேதி வரை தடுப்பு காபல் நீட்டிக்க மாஜிஸ்திரேட் சியா ஹுயே திங் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு முன் அந்த ஆடவருக்கு இம்மாதம் 16ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு தடுப்பு காவல் வழங்கப்பட்டிருந்தது.
முன்னதாக இந்த குற்றம் அந்த மையத்தின் மாணவர் தங்கும் அறையில் நிகழ்ந்ததாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தது.
இந்நிலையில் இது குறித்து அன்றைய தினம் மைய தலைமையாசிரியர் போலீஸ் புகார் செய்ததை அடுத்து 33 வயதான அந்த நபர் மறுநாளன்று சுங்கை பட்டாணியில் உள்ள தமது வீட்டில் கைது செய்யப்பட்டார் எனவும் அச்செய்தியில் தகவல் உள்ளது.




















