கோலாலம்பூர்:
புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில்,அரசு வழங்கி வரும் RM150 ஆரம்பப்பள்ளி கல்வி உதவித்தொகை (BAP), நாடு முழுவதும் உள்ள 50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் பெற்றோர்களுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது.
முதலாம் ஆண்டு முதல் படிவம் 6 வரை பயிலும் 5.2 மில்லியன் மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர், இதற்காக அரசாங்கம் RM800 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த உதவித்தொகை பள்ளிச் சீருடைகள், புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, இந்த RM150 உதவித்தொகை பெற்றோர்களின் சுமையைக் குறைப்பது மட்டுமல்லாமல், சில்லறை வர்த்தகம் மற்றும் சீருடை விற்பனையாளர்களுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு சிறு பொருளாதாரத் தூண்டுகோலாகவும் அமைகிறது.
இந்தத் தொகை சிறியதாகத் தோன்றினாலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இது ஒரு முக்கிய வாழ்வாதாரமாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன், பள்ளிகளில் இந்த நிதியை விநியோகிப்பதன் மூலம் பெற்றோர்-ஆசிரியர் இடையிலான உறவும் வலுப்படுவதாகக் கூறப்படுகிறது.




















