பொய் புகார் வழங்கியதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

ஈப்போவில் பொய்யான போலீஸ் புகாரளித்ததற்காக 39 வயதான போலீஸ்காரர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. L/Kpl S. வரதராஜு பிள்ளை குற்றவியல் சட்டத்தின் பிரிவு 182 இன் கீழ் இன்று (அக்டோபர் 8) குற்றச்சாட்டை படித்த பின்  நீதிபதி நூர் அஸ்ரீன் லியானா முகம்தா முன் குற்றவாளி அல்லர் என்றார்.

ஆகஸ்ட் 27 மதியம் 3.30 மணியளவில் மத்திய காவல் நிலையத்தில் L/Kpl Aminah Berahim என்பவரிடம் அந்த போலி புகாரினை அவர் அளித்ததாகக் கூறப்படுகிறது.

அவரது வழக்கறிஞர், அமிரிக் சிங்  1,000 ரிங்கிட்டிற்கு ஜாமீன் கோரினார். வரதராஜு ஒரு அரசு ஊழியர், அவர் மாதத்திற்கு சுமார் 2,000 ரிங்கிட் சம்பாதிக்கிறார். அவர் 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு குழந்தைகளையும், அவரது 61 வயதான வயதான தாயையும் கவனித்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று அவர் கூறினார்.

நூர் அஸ்ரீன் லியானா ஒரு நபர் உத்தரவாதத்துடன்  2,000 வெள்ளி ஜாமீன் தொகையை விதித்தார். வழக்கு நவ.11 ஆம் தேதி மீண்டும் செவிமெடுக்கப்படும்.  துணை அரசு வழக்கறிஞர் முஹம்மது ஹைக்கல் அஸிராஃப் சுஹைமி வழக்கு தொடர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here