LATEST ARTICLES

மோசடி செய்த பவர் ஸ்டார்- பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், ராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டிணத்தை சேர்ந்த முனியசாமி என்பவருக்கு ரூ.15 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்தை அட்வான்ஸ் தொகையாக பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், கடனும் வாங்கி கொடுக்காமல் பெற்று கொண்ட ரூ.14 லட்சத்தையும் திருப்பி கொடுக்காததால் முனியசாமி...

ஜோகூர் குடிநுழைவுத்துறை சோதனை; 57 வெளிநாட்டினர் கைது

­ஜோகூர் குடிநுழைவுத் துறையினர் இன்று (டிசம்பர் 8) பாசீர் கூடாங்கின் ஒரு அடுக்குமாடி பகுதியில் Ops Sapu நடவடிக்கையில் 57 வெளிநாட்டினரை கைது செய்துள்ளனர். நள்ளிரவு 12.20 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில் இந்தோனேசியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 374...

கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல்

வெளிநாட்டவர் நடத்தும் வளாகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை மறைத்து வைத்திருந்த ஒரு கடையை மலாக்கா உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் அம்பலப்படுத்தியுள்ளது. மலாக்கா அமைச்சின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த நடவடிக்கையின் வீடியோ வைரலாகியுள்ளது. சமூக ஊடக பயனர்கள் அமலாக்கத்தின் நடவடிக்கையைப் பாராட்டி குற்றத்தை வெளிச்சம் போட்டுக்...

டீசல் கடத்தல் கும்பல் மீது போலீசார் நடத்திய சோதனையில் 6 வெளிநாட்டினர் கைது

போர்ட் கிள்ளானில் மானிய விலையில் டீசல் கடத்தும் கும்பல் மற்றும் எண்ணெய் டேங்கர் மீது போலீசார் சோதனை நடத்தியபோது 6 வெளிநாட்டு ஆண்கள் பிடிபட்டனர். புக்கிட் அமான் உள் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குனர் ஹசானி கசாலி கூறுகையில், ஆறு பேரும் டிசம்பர் 6...

இல்லாத ஆன்லைன் முதலீட்டு திட்டத்தில் 75,000 ரிங்கிட்டை இழந்த ஆடவர்

உணவுப் போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்த 50 வயது நபர், இல்லாத ஆன்லைன் முதலீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்டு RM75,300 இழந்தார். சிபு காவல்துறைத் தலைவர் ஏசிபி சுல்கிப்ளி சுஹைலி கூறுகையில், பாதிக்கப்பட்டவர் செப்டம்பர் 10 ஆம் தேதி லாபகரமான வருமானத்தை வழங்கும் கவர்ச்சிகரமான ஆன்லைன் முதலீட்டுத் திட்டத்தை முகநூலில்...

ஜெய்ன் ரய்யானின் கொலை குறித்து ஊகங்களை நிறுத்துமாறு காவல்துறை கூறுகிறது

ஜெய்ன் ரய்யான் அப்துல் மதீனின் மரணம் குறித்து ஊகங்கள் வேண்டாம் என்று காவல்துறை கூறுகிறது. இதுபோன்ற ஊகங்கள் விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சிலாங்கூர் காவல்துறை தலைவர்  டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார். இத்தகைய கருத்துக்கள் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நேசிப்பவரின் இழப்பால் துயரப்படும்...

காணாமல் போன 14 வயது சிறுவனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் போலீசார்

கோலாலம்பூர்: நேற்று காணாமல் போனதாகக் கூறப்படும் 14 வயது மாணவனைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை பொதுமக்களிடம் உதவியை நாடுகிறது. செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜாம் ஹலீம் ஜமாலுதீன் கூறுகையில், மாணவர் முஹம்மது டேனியல் அக்மல் சுல்கைரி கடைசியாக வியாழன் நள்ளிரவு 12.30 மணியளவில் செராஸின் ஜாலான்...

மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் கனடாவில் 335ஆவது குளோபல் ஷோரூமைத் தொடங்கியது

கனடாவில் மலபார் கோல்ட் & டைமண்ட்ஸின் முதல் ஷோரூம் மிசிசாகாவில் கிரேட்டர் டொராண்டோவில் உள்ள ஹார்ட்லேண்ட் டவுன் சென்டரில் திறக்கப்பட்டது. அமெரிக்காவிற்குப் பிறகு, வட அமெரிக்காவில் மலபார் கோல்ட் & டைமண்ட்ஸின் 2ஆவது நாடாக கனடா விளங்குகிறது. கனடாவில் திறக்கப்பட்ட முதல் இந்திய அனைத்துலக நகை விற்பனையாளராக...

5ஜி தயார் நிலை – சமூகத்  தாக்கம்

5ஜி தொழில்நுட்பம் என்பது ஐந்தாவது தலைமுறை கைப்பேசி தொலைத் தொடர்பு ஆகும். இது 4.0 தொழில் புரட்சியின் வேகம் கொண்டது. பரந்த சேவை, நம்பகமான பாதுகாப்பான விரிவாக்கத் திறன் தேவைகளால் ஈர்க்கப்பட்டது. இது ஒரு வேகமான கைப்பேசி இணைய இணைப்பைவிட அதிக அளவு தரவு அடிப்படையிலான உள்ளடக்கத்தை பயன்படுத்த...

28 ரோந்து கார்களால் துரத்தி பிடிப்பட்ட அன்பரசனுக்கு 10,000 ரிங்கிட் அபராதம்

28 ரோந்து கார்களுடன் அதிவேக கார் துரத்தலில் ஈடுபட்ட ஒரு வாகனமோடிக்கு கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், காவல்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காகவும் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று RM10,000 அபராதம் விதித்தது. மாஜிஸ்திரேட் ஷாரில் அனுவார் அகமது முஸ்தபா முன் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அன்பரசனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது...