டிங்கில் தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

டிங்கில் தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம், மலேசிய சத்திய சாய் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இலவசமாக நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் சுமார் 200 பேர் கலந்து பயன் பெற்றனர்.

சிப்பாங் மாவட்ட சுகாதார அலுவலகத்துடன் இணைந்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நேற்று நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் பரிசோதனை, பல் பரிசோதனை, பெண்களுக்கான பரிசோதனைகள் உட்பட மேலும் உடல் சார்ந்த பலவகை சோதனைகளும் நடத்தப்பட்டதாக இதன் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் குணா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் பத்து மருத்துவர்கள், பத்து தாதியர்கள், உடல் பருமன் பிரச்சினைக்கான நிபுணர்கள்

வருகை புரிந்து மருத்துவ சோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கியதோடு தேவையானவர்களுக்கு மருந்துகளும் வழங்கினர்.

உடல் பருமன் பிரச்சினைக்கான நிபுணர்களும்  இப்பிரச்சினையை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கும்  ஆலோசனைகள் வழங்கினர். அண்மைய காலமாக 40 வயது முதல் 60 வயது வரை உள்ள குறிப்பாக ஆண்கள் பலர் உடல் இன்னல்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வழிகளைக் கூறியதோடு  தொடர் சிகிச்சைக்கான கடிதமும் வழங்கினர்.

உள் நாட்டவரை தவிர்த்து, அந்நித் தொழிலாளர்களும்  கலந்து கொண்டு பயனைடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட  இந் நிகழ்ச்சியில் சுமார் ஐம்பது பேர் ரத்த தானம் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here