உலக யோகா பயிற்சியில் அதிகமான மாணவர்கள் கலந்துக் கொண்டனர்

உலக யோகா தினத்தை முன்னிட்டு இங்கு சிலியாவ்  தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்ற யோகா தினத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் சீனப்பள்றி மாணவர்களும் கலந்துக் கொண்டனர்

ரந்தாவ் சிலியாவ் சாலையில் அமைந்துள்ள இந்த தோட்டத் தமிழ்ப்பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு கோபியோ மற்றும் மலேசிய இந்திய தூதரகம் இனைந்து இந்த உலக யோகா தினத்தை ஏற்பாடு செய்தனர்.

ரந்தாவ் வட்டாரத்தில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் சீனப்பள்ளி மாணவர்களும் கலந்துக் கொண்டனர்.இந்த உலக யோகா தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் தொடர்ந்து உலக யோகா பயிற்சியை மனவளக் வாழ்க வளமுடன் கற்று வருகின்றனர். மனவளக்கல்வி மையத்தின் சார்பாக ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் யோகாசணங்களை மாணவர்களுக்கு செய்து காட்டினர்.

கடந்த  மாதம் தொடங்கி இந்த மாதம் வரை ஒரு மாத்த்திற்கு 50 பள்ளிகளில் இந்தழநிகழ்வை நடத்தி சிறப்பு செய்தனர். இதில் 50 வது பள்ளியாக சிலியாவ் தோட்ட தமிழ்ப்பள்ளியைச் தேர்வு செய்து நிறைவு செய்தனர்.

இந்திய தாதரகத்தின் சார்பில் சன்ஷன் கல்வி குழுமத்தின் நிருவனர் ஆர்வி.ஷாம்பிரசாத் வாழ்த்துரை வழங்கினார். அவர் யோகாசனங்களை குறித்து சிறப்புகளை பற்றி எடுத்துரைத்தார்.

இந்த யோகா பயிற்சியில் டத்தோ கனகராஜா, சன்ஷைன் நிருவனர் ஷாம்பிரசாத்,  ஆசியர்கள் மற்றும் தமிழ்ப்பள்ளி மற்றும் சீனப்பள்ளி மாணவர்கள் கலந்துக் கொண்டு ஆசனப் பயிற்சியை செய்தனர்.

இந்த உலக யோகா பயிற்சியில் சிலியாவ், செண்டையான், ஸ்பிரிங்ஹில், அதர்ட்டன், ஆகிய தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.இந்த யோகா பயிற்சியில் கலந்துக் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கோபியோ நிர்வாகிகள் டத்தோ கனகராஜா. மற்றும் ஷாம்புரசாத் பரிசுகளை எடுத்து வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here