தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு

சென்னை – தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும் என்று புதிய மின்சார வாகன கொள்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான இலக்குகளை மத்திய அரசு வகுத்துள்ளது.

இந்நிலையில் மின்சார வாகனங்களுக்கான தமிழக அரசின் கொக்கை முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில் மின்சார வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி நுகர்வோரும் பயனடையும் வகையில் பல்வேறு சலுகைகள், திட்டங்கள், வரிக்குறைப்பு அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

அதன்படி தமிழகத்தில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மின்சார வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும். தமிழகத்தில் முதற்கட்டமாக மின்சாரத்தால் இயங்கும் 525 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில்  இன்னும் சில மாதங்களில் இவை செயல்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, இவற்றுக்கான சார்ஜர் மையங்களும் தேவைக்கேற்ப அமைக்கப்படும் என்றும், இதன்மூலம் புதிதாக வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் வரி விலக்கு மற்றும் முதலீட்டு மானியம் காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here