அருணகிரிநாத சுவாமிகள் அருளிய கந்தர் அந்தாதி என்ற பாடலை நாம் வீட்டை விட்டு செல்வதற்கு முன்பு படித்து வந்தாலே நம் பயணத்தில் ஏற்படும் தடைகளும் நாம் மேற்கொள்ளும் காரியத்தில் ஏற்படும் தடைகளும் நிச்சயம் நீங்கிவிடும். நாம் எதற்காக பயணத்தை மேற்கொள்கின்றோமோ அதில் வெற்றியை அடைந்து விட்டுதான், மீண்டும் வீட்டிற்கு திரும்புவோம். உங்களுக்கான வெற்றியைத் தேடித்தரும் பாடல் இதோ..
சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேர்ந்த வென்னிற்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே
தூரதேசப் பயணத்திற்கு முன்பும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் நல்லது. நாம் எதற்காக பயணத்தைத் தொடங்குகின்றோமோ, அதற்கான வெற்றியை நிச்சயம் பெற்றுத் தரும் பாடல்தான் இது.