திராட்சையில் பல வகையுண்டு. திராட்சைக்கு நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு.
குறிப்பாக, அல்சர் என்ற குடல்புண் நோய்க்கு, திராட்சை அற்புதமான மருந்தாகும். காலையில் திராட்சைப்பழச்சாறு குடித்து வந்தால், வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும், கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுமையாக குணமாகும்.
தலைச்சுற்றல், மலச்சிக்கல், கை கால் எரிச்சல் உள்ளவர்களும் திராட்சையை பழமாகவோ, ஜூஸ் ஆகவோ சாப்பிடலாம். மலச்சிக்கல் உள்ளவர்கள், உலர் திராட்சையை இரவு உறங்கும் முன், ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை அதன் பலன் தெரியும்.
இதே பிரச்னை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு, காலையில் நசுக்கி, சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தாலே, பிரச்னை சரியாகிவிடும்.