வருமானம் இழப்பு வாழ்வாதாரரத்திற்கு வழி என்ன? – முனியாண்டி கேள்வி

வருமானம் இழப்பு வாழ்வாதாரரத்திற்கு வழி என்ன? - முனியாண்டி கேள்வி

கோலாலம்பூர், மார்ச் 13-

கோவிட் 19 தொற்று தாக்கத்தால் வருமானம் பாதிப்படையும் சாத்தியம் அதிகமிருப்பதால் செலவுகளையும் நிதானமாகச் செய்யும்படி மலேசிய இந்துச்சகம் பினாங்கு மாநிலப் பேரவைத்தலைவர் எம். முனியாண்டி மக்களுக்கு வலியுறுத்தினார்.

மாஸ் 2,000 அனைத்துலக விமானப்பயணங்களை ரத்து செய்திருக்கிறது. பயண ரத்து என்பது இம்முறை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு அதன் பணியாளர்கள் 13 ஆயிரம்பேர் சம்பளமற்ற விடுமுறைக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

                    முனியாண்டி

இவர்களுக்கு மூன்றுமாதம் வரை சம்பளம் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகவே இருக்கும் என்று முனியாண்டி கோடி காட்டுகிறார்.

இந்நிலைமைக்கு பரிகாரம் என்ன என்பதுதான் இன்றைய தலையாய கேள்வியாக இருக்கிறது. இவர்கள் வீட்டுக்கடன் பெற்றிருப்பார்கள். கார் கடன் பெற்றிருப்பார்கள்.

இக்கடனைசெலுத்த இவர்களால் முடியாது. 13 ஆயிரம் பணியாளர்களின் கதி என்னவாக இருக்கும் என்பதற்கு புதிய ஆட்சி என்ன செய்யப்போகிறது?

புதிய தொழிலாளர் அமைச்சு இதற்கான மாற்றுவழிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இது, தொழிலாளர் அமைச்சின் விவகாரம் என்றும் இருந்துவிடமுடியாது. ஒட்டுமொத்த சமூகப்பிரச்சினை. மலேசியத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை இது என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டிய தருணம் இது என்பதால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் யாவும் புதிய வியூகங்களுக்குத் தயாராக வேண்டும்.

இதில் நிதியமைச்சின் பங்கு அளப்பரியதாக இருக்கும் என்பதையும் முனியாண்டி கூறினார். வரும் ஏப்ரல் மாதம் வரை விமானப்பயணங்கள் சீராக இருக்க வாய்ப்பில்லை என்றும் அறியப்படுவதால் இப்பிரச்சினைகளுக்குத் தூரநோக்குச் சிந்தனையுடன் தீர்வு காணப்படவேண்டும் என்கிறார் முனியாண்டி.

இன ரீதியான பிரச்சினையும் இதுவல்ல. மதத்திற்கு அப்பால் மனுக்குலப்பிரச்சினை மனிதப்பிரச்சினை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here