கல் எறிபவர்களும் உண்டு…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவுக்கு, ரசிகர்கள் அழைக்கப்படவில்லை.

நடிகர் – நடிகைகள், மாஸ்டர் படத்தில் பணியாற்றிய தொழிலநுட்பக் கலைஞர்கள் பங்கேற்றனர். விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:-
“வாழ்க்கை என்பது நதி போன்றது. அதில் கல் எறிவார்கள். வரவேற்பார்கள். வணங்கவும் செய்வார்கள். இப்படி எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். ஆனாலும் நாம் நதி மாதிரி, கடமையை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்க்கை குறுகியது. பிரச்சினைகள் வரும் – போகும். அதுபற்றி எல்லாம் பொருட் படுத்தாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here