குழப்ப(ம்) வேண்டாம்!

குழப்ப(ம்) வேண்டாம்!

கோலாலம்பூர், மார்ச் 19-

மக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கும் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் குளறுபடிகள் இருக்கின்றன என்ற குறைபாடுகள் பேசப்படுகின்றன. உண்மைதான் மக்களுக்குத் தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படவில்லை என்பது நியாயமானதா?

நியாயமா என்பதல்ல கேள்வி. சரியானவற்றை ஆராயாமல் அவசரமாய் வெளியிட்ட செய்திகளால் மக்கள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள் என்பதுதான் வருத்தம்.

இதில், மக்கள் குழப்பமடைந்திருக்கின்றனர் என்றால் சரியான அறிவிப்புகள் மக்களிடம் சேர்க்கப்படவில்லை என்றுதான் அர்த்தமாகிறது.

மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வந்ததும் பலர் குழப்பத்தில் சிக்கினர். சரியான அவகாசம் கொடுக்கப்படவில்லை என்பதில் மக்கள் களேபரத்திற்கு ஆளாகினர்.

பொதுவாகவே மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு என்றதும் வெளியூரிலிருந்து படிக்க வந்தவர்கள் நிச்சயம் சொந்த ஊருக்குப் போகவேண்டியது அவசியம்.

முதல்நாளே இந்தக் குழப்பத்தில் பலர் பெரும் அவதிக்குள்ளாயினர். மாணவர்கள் வாடகை அறையில் தங்கியிருக்க முடிந்தாலும் உணவு என்று வரும்போது பெரும்பிரச்சினையாகிவிடும் என்று பயந்தனர்.

இதே நிலைதான் உயர்க்கல்வியாளர்களுக்கும் ஏற்பட்டது. எங்கு போவது, உணவுக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் கலங்கியவர்களும் அதிகம்.

வசதி படைத்தவர்களுக்காகவே பேரங்காடிகள் என்றாகிப்போனது. அத்தியாவசியப் பொருட்களை சிலர் மட்டுமே அள்ளிக்குவிக்கும் அவலத்தைப் பதிவிட்டிருந்ததால் குழப்பங்கள் தெருக்கூத்தாய் ஆனது.

இவற்றுக்கெல்லாம் அவசர கதிதான் காரணம். ஒருமாதத்திற்கு முன்னமே தயாராக இருந்திருந்தால் மக்களும் தயார் நிலையில் இருந்திருப்பார்கள்.

இனியாவது சரியான ஆலோசனைகளைத் தருவதில் சரியாகச் செயல்படவேண்டும். சில தரப்பினர் கவலைப்படப்போவதில்லை. சாதாரண மக்களுக்குப் பணம் என்பது பிரச்சினையகத்தான் இருக்கும். அடுத்து உணவுப்பொருள், விலையேற்றம் என்பதெல்லாம் பிரச்சினையாகவே உருவெடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here