குழந்தை பராமரிப்பில் குற்றமில்லாமல் இருக்க பதிவு பெறுதல் வேண்டும்

குழந்தை பராமரிப்பில் பதிவு பெறுதல் வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 20-

பதிவு பெறாத குழந்தை பராமரிப்பு இல்லங்கள் குழந்தை பாதுகாப்புக்கு ஏற்ற இடமா என்பதில் ஐயப்பாடு எழுந்துள்ளது.

பெரியவர்கள் தங்கள் பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்துகொள்ள முடியும். குழந்தைகளால் அப்படிச் செய்துகொள்ள முடியாது.

குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் சில பதிவு பெற்றிருந்தும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன என்று பதிவு பெற்ற குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களின் தலைவர் அனிஸா அஹமட் தெரிவித்துள்ளார்.

பதிவு பெற்ற பராமரிப்பு இல்லங்கள் அரசு ஆணையை ஏற்று மூடப்பட்டாலும் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தனியார் பராமரிப்பு இல்லங்களைத்தான் நாடவேண்டியிருக்கிறது.

வேலையில் இருக்கும் தாய்மார்களுக்கு இது இக்கட்டான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தாய்மார்களுக்கு வேறுவழியில்லை. தனியார் பாரமாரிப்பு இல்லங்களைத்தான் நாடவேண்டியிருக்கிறது.

கொரோனா 19 பாதிப்பின் காரணமாக பல தம்பதியர் குழந்தை பராமரிப்பாளர்களாக மாறியிருக்கின்றனர். இது தற்காலிக நடவடிக்கையாக இருந்தாலும் மாற்று வழி அறியாமல் இருக்கின்றனர்.

தனியார்களின் குழந்தை பராமரிப்பு இல்லங்கள் முறையாகப் பதிவு பெற்றிருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார் அவர்.

குழந்தைகள் வதையைத் தடுப்பதற்கு பதிவுதான் சிறந்த வழி. அகப்பக்கங்களிலும் விவரங்கள் அறிய முடியும். இதுகுறித்து கூடுதல் விவரங்கள் அறிய விரும்புன்றவர்கள் 018- 900 3005 என்ற எண்ணில் அழைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here