நாட்டிற்கு சேவையாற்றிய காவல் அதிகாரிகளுக்கு P.J.P.N விருது

(ரெ. மாலினி,மலாக்கா)

வீரம், தைரியம், தியாகம் ,தேசபக்தி ஆகிய குணங்களின் அடிப்படையில் அரச மலேசிய காவல்துறையில் சேவையாற்றியவர்களுக்கு பிங்காட் ஜசா பலாவான் (Hari Pahlawan Negara Pingat P.J.P.N ) எனும் உயரிய விருதினை 184 பேர் பெற்றுக் கொண்டனர்.

தேசிய மாவீரர் தினத்திற்கு வழங்கப்படும் விருது இம்முறை மாநில ஆளுநர் துன் ஸ்ரீ செத்யா முகமட் அலி முகமட் ருஸ்தாம் 74 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரத்தியேகமாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஆயேர்குரோ ஸ்ரீ நெகிரி மண்டபத்தில் நடைபெற்ற விருதளிப்பில் 165 ஓய்வுப் பெற்ற முன்னாள் காவல் அதிகாரிகளும் சேவையில் தொடர்ந்து பணியாற்றி வரும் காவல் துறையினரும் இவ்விருதினை மாநில ஆளுநரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

தி. சுந்தரசேகர், சி. புருஷோத்தமன் நாயர், கே. குணசீலன்,பெ. அன்பழகன், து. இரா ஜகோபல், கு. அல்கேஸ் மற்றும் ஆர். இராமநாதன் விருதினை பெற்றுக் கொண்டனர்.

12 ஜூலை 1948 முதல் 31 ஜுலை 1960 நாட்டின் அவசர பிரகட வரையான காலப் பகுதியில் மலாயா கூட்டமைப்பு மற்றும் ஜூலை 1960 முதல் ஜூன் 17, 1968 வரையும் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியின் போது, 1962 முதல் 1990 வரை சபா மற்றும் சரவாக் மாநிலத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியவர்களின் சேவைக்கு அங்கி காரம் வழங்கும் வகையில் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டது.

அன்பழகன் பெருமாள்

22 ஆண்டுகள் சபா, சரவாக் உற்பட மலேசியாவின் பல இடங்களில் சேவையாற்றி ஓய்வுப் பெற்ற பெ.அன்பழன் ஜோகூரில் மிக பெரிய கொள்ளைக் கும்பலை முறியடிப் பதற்காப் பாடுப்பாட்டு கடுமையாக உழைத்த தருணங் கள் மறக்க முடியாதவை ஒரு சம்பவம் என மக்கள் ஓசை யிடம் பகிர்ந்துக் கொண்டார் .மூன்று நாட்கள் குளிக் காமல், உறக்கமின்றி வாலை தோப்பில் பதுங்கி கடத்தல் குப்பலை வெற்றிகரமாக பிடிக்க எங்களது குழு உயிரை பணயம் வைத்து சேவையாற்றியது என்றார். இது போன்று பல அதிரடி கைதுச் நடவடிகைகளும் தான் உழைத்த அச்சேவைக்கு விருது கிடைத்தில் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

அழகேஸ் குழந்தைசாமி (ALKES )

மலேசிய உற்பட வெளி நாடுகளிலும் மக்களின் பாது காப் பிற்கு பல பகுதிகளில் 41 ஆண்டுகள் சேவை யாற்றி ஓய்வுப் பெற்ற தனது அனுபவங்கள் எண்ணில் அடங்காதவை என அழகேஸ் ( வயது 62 ) கூறினார். கொம்யூனிஸ்ட் காலத்தில் அவர்களின் நடவடிக்கை முறியடிக்க கடுமையாக காட்டில் பல மாதங்கள் தங்கி வேலைச் செய்தோம்.

உலவு பேதாவாக பணியாற்றிய அனுபவம் , யுனைட்டட் நேஷன் சூடான், டிமோலேஸ்டே, ஐனா துறை சார்பில் காவல் அதிகாரியாக பணியாற்றினேன். ரவூப் பஹாங் மாநிலத்தில் கொம்யூனிஸ்ட் நடமாட்டத்தை ஒடுக்க சில நாட்கள் தூக்கமின்றி தனது குழுவுடன் பணியாற்றிய அனுபவங்கள் இன்று வரை வாழ்வில் மறக்க முடியாத சம்பவமாகும். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படாமல் பாதுகாப்பாக அங்கிருந்து தம்பித்தோம்.

குணசீலன் கருப்பையா

1988 ஆம் ஆண்டு காவல் துறையில் கால் பதித்து சபா சரவாக் ஆகிய இடங்களில் நீண்ட காலம் வேலை செய்து வந்தாகவும். சபா மாநிலத்தில் பணியாற்றிய காலம் மிக ஆபத்தான தருணங்கள் என்றார்.கொக்கோ தோட்டத்தில் இரு நாட்கள் தங்கி கொள்ளையர்களின் நடவடிக்கையை முறியத் தோம். இதுப் போன்ற பல அனுபவங்கள் தனக்கு உள்ளது என்றார். காவல் துறையில் பொது பணி, நீதிமன்றம் போன்ற பிரிவுகளில் பணியாற்றிய பல அனுபவங்களைப் பெற்றுக் கொண்டேன் அந்த அனுபவம் தான் வாழ்க்கையின் முன்னேற்றதிற்கும் பிள்ளைகளை நல்ல முறையில் கட்டுப் கோப்புடன் வளர்த்து மேன்மக்களாக உருவாக்குவதற்கும் வழிவகுத்து உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் மாநில காவல் தலைவர் டத்தோ சைனோல் சமா, காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here