கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை இந்திய டாக்டர் சாதனை

பெங்களூரு,மார்ச் 28,

உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 114 புதிய தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதுவரை 17 பேர் இறந்துள்ளனர், 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், பெங்களூரில் உள்ள ஒரு டாக்டர் கொரோனாவுக்கு ஒரு சிறந்த சிகிச்சையை கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார்.

கொரோனாவை குணமாக்க சிகிச்சை முறையை கண்டுபிடித்ததாக பெங்களூரு புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் கூறியுள்ளார். இந்த வார இறுதிக்குள் இந்த சிகிச்சை பரிசோதனைக்கு தயாராக இருக்கும் என்று அவர் கூறி உள்ளார்.

நோயெதிர்ப்பு மண்டலம் சார்ஸ்-கோவ் -2 வைரஸ் காரணமாக பாதிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக செயல்படும், இதனால் நோயாளியின் உடல் கொரோனா வைரஸுடன் வலுவாக போராடுகிறது.இந்த மருந்து கொரோனா வைரஸின் “தடுப்பூசி” அல்ல,

இது குறித்து டாக்டர் விஷால் ராவ் கூறி உள்ளதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கு அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக ஊசி மூலம் வழங்கக்கூடிய சைட்டோகைன்களை நாங்கள் தயாரித்துள்ளோம். மேலும் நாங்கள் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். இதன் முதல் தொகுப்பு இந்த வார இறுதிக்குள் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here