அடங்க மறுக்கிறது கொரோனா அமைதி கெடுக்க வரானா?

அனைத்திற்கும் காரணம் இருக்கிறது. காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பார்கள். கொரோனா தொற்று இப்போது ஒவ்வொருவரையும் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

நெருங்குவதற்கு நாம் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதாகவே பொருள்படுகிறது.

எப்போதுமே வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் செலாயாங் பாசார் போரோங் மொத்த விலைச்சந்தையில் கோரோனா -19 விற்பனைக்கு வந்திருக்கிறது என்றால் அது தானாக அங்கு வரவில்லை. யோரோ ஒருவர் சுமந்துவந்து விட்டுச்சென்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது. இது, உணவில் விஷம் கலப்பதற்குச் சமம்.

இப்போது நமக்குத்தேவை தெனாலிராமன் கதை. வளர்க்கச்சொல்லி கொடுக்கபட்ட பூனைக்கு கொதிக்கக் காய்ச்சிய பாலைக் கொடுத்த தெனாலிராமனைப்போல், பாலைக்கண்டாலே பயந்து ஓடும் பூனைபோல் கொரொனா ஓடவேண்டும் .

அதற்கு என்ன செய்யவேண்டும் என்று மறுபடியும் மறுபடியும் கேட்டால் மன்னிக்கவே முடியாது. காது வலிக்கும் அளவுக்குச் சொல்லியாகிவிட்டது. எந்தச் சந்தை என்பது முக்கியமல்ல. எட்டி நில் என்பதாகத்தான் நம் பார்வை இருக்கவேண்டும்.

கொரோனாவைக் கொண்டுவந்தவர்கள் 40 ஆயிரத்தில் ஒருவராகக்கூட இருக்கலாம். ஆனால், இப்போது கவனமாக இருக்க வேண்டியவர்கள் அவர்கள் அல்லர். அவர்களின் காதில் ஏதும் ஏருவதாக இல்லை.அவர்கள் மாருவதாகவும் இல்லை.

அதனால் ஒதுங்கியிருக்க வேண்டியவர்கள் யார் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டிய நேரம் இது. இனியும் சொல்லிச்சொல்லி அலுத்துப்போக வைத்தால் கழுதைகள் மேல் என்றே எண்ணத்தோன்றும். அப்படியோர் எண்ணம் வராமல் இருக்க வீட்டில் இருங்கள்.

இத நேரத்தில் எத்தனை விரதங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
பத்திரமாக இருக்க பத்தியம் எடுத்துக்கொள்ளும் காலம் இது. பக்கத்து வீட்டுக்காரரைக்கூட பார்க்காமல் இருப்பது நல்லது.

பில்ளைகளை வெளியே விட வேண்டாம். வீட்டில் இருக்கும் இந்த நேரம்போல் இனி அமையாது. பயன்மிக்கதாக மாற்றிக்கொள்ளலாம்.

ஏனெனில், மலேசியத்தின் சூழல் விரைந்து மாறும். அதற்கான சூழல் நெருங்கி வருகிறது. மீண்டும் புதிய தெம்பு பிறக்கும் காலம் வெகு தொலைவிலில்லை.

அக்காலம் இன்னும் விரைவாய் வர நமது பங்கு என்ன வென்ரு யோசிக்கத்தேவையில்லை. தேவையில்லையெனில் வெளியே போகவேண்டாம். தேவையாக இருந்தால் ஒத்திப்போடுவதே சிறப்பு.

அரசு சொல்வதை அக்கறையுடன் கேட்டாலே போதும். அது அனைவருக்கும் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here