அத்துமீறலா? ஓய்வூதியம் இழக்க நேரிடலாம்!

அத்துமீறலா? ஓய்வூதியம் இழக்க நேரிடலாம்!

கோலாலாம்பூர், ஏப். 18-

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி.ஓ) மீறியதாக குற்றத்தைப் புரிந்தவர்களுக்கு ஆயிரம் வெள்ளி அபராதம் என்பது ஒருபுறமிருக்க, அரசு ஊழியர்கள், அரசு வேலையில் ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதியத்தை இழக்ககக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பொது, பொதுச்சேவை ஊழியர்கள், (கியூபாக்ஸ்) ஊழியர்கள் தொழிற் சங்கங்களின் தலைவர் அட்னான் மாட் இதனைத் தெரிவித்திருக்கிறார். அரசு ஊழியர்கள் , அரசு ஓய்வு பெற்றவர்கள் எப்போதும் அவர்களின் சம்பளம், ஓய்வூதியம் உட்பட அவர்கள் அனுபவிக்கும் பல்வேறு சலுகைகள் நிருதப்படும் சாத்தியம் இருப்பதைச் சுட்டிக்காட்டினார் செய்யப்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி சட்டத்தையோ, பிர அத்துமீறல்களில் தண்டிக்கப் படுகின்றவர்களுக்கு இந்நிலை உருவாகலாம்.

அரசு ஊழியர்கள் , அரசாங்க ஓய்வு பெற்றவர்கள் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடுக்கும் முன் மாதிரிளாக இருக்கவேண்டும். அரசாங்கம் பிறப்பித்திருக்கும் அனைத்து அரசாங்க உத்தரவுகளுக்கும் கட்டுப்படுவது மிக முக்கியம்.

தங்களுக்கான வாழ்வாதார ஓய்வூதியங்களை இழக்க எவருக்கும் துணிவிருக்காது. ஆதாலால் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டி கூடல் இடைவெளியை உணர்ந்து நடந்துகொள்ளூமாறு அவர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here