புலாவ் அமான் –
பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ப. இராமசாமி, பத்து கவான் பகுதியில் தனியாக உள்ள புலாவ் அமான் தீவிற்கு படகின் வழி சென்று 46 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கினார்.
செபெராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் டேவிட் மார்ஷல் அவர்தம் குழுவினர் மற்றும் புலாவ் அமான் கிராம பாதுகாப்பு நிர்வாக கழகத்தின் தலைவர் சாய்பி அப்துல் மஜிட் இவர்களின் துணையுடன் பேராசிரியர் இராமசாமி களம் இறங்கி வீடு வீடாகச் சென்று உதவினார்.
கோவிட்- 19 நடமாட்ட ஆணையின் கீழ் வீட்டில் முடங்கிக்கிடக்கும் புலாவ் அமான் மக்களுக்கு தென் செபெராங் பிறை மாவட்ட அலுவலகம், காவல் துறையினர், பகுதி நேர பணியாளர்கள் பேராசிரியர் இராமசாமியுடன் துணை நின்று உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.