25 மாணவர்களுக்கு விஷம் தந்த ஆசிரியைக்கு சீனாவில் தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

சீனாவின் மத்திய பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மழலையர் பள்ளி பெண் ஆசிரியர் ஒருவருக்கு சக ஆசிரியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை பழிவாங்கும் நோக்கில்  குழந்தைகள் சாப்பிடும் உணவில் சோடியம் நைட்ரைட் என்னும் வேதிப் பொருளை கலந்துள்ளார். இதனால் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 24 குழந்தைகள் பாதிக்கப்பட்டன. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது அந்த பெண் ஆசிரியருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு விஷம் கொடுத்த கொடூர ஆசிரியர் : 

சக ஆசிரியரை பழிவாங்குவதற்காக மாணவர்கள் சாப்பிடும் கச்சு உணவில் சோடியம் நைட்ரைட் கலந்துள்ளார்.  அதைக் குடித்ததும் அங்கிருந்த 25 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விஷத்தை எடுத்துக் கொண்டதால் கடந்த ஜனவரி 2020இல் ஒரு குழந்தைக்கு உடல் உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தர். மேலும், சுமார் 24 பேருக்கு மோசமான உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் 39 வயதான வாங் யுன் என்ற பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த இல் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோசு நீதிமன்றம் அவருக்குக் கடந்த 2020ஆம் ஆண்டிலேயே தூக்குத் தண்டனையை வழங்கியிருந்தது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இருப்பினும், அவரது மேல்முறையீடு மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை வாங் யுனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஆசிரியர்களை நம்பித் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் அவர்களாலேயே தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படும் போது பெற்றோர் அதிர்ச்சியடைகிறார்கள். இது போன்ற சம்பவங்களை தடுக்க அரசு பள்ளிகளின் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது சீனாவில் பெற்றோர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here