ரெட்மியின் புதிய 10எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்

சியோமியின் ரெட்மி பிராண்டு டிமென்சிட்டி 820 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களை மே 26 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இதனை உறுதிபடுத்தும் டீசர்களை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி 10எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் குவாட் பிரைமரி கேமரா சென்சார்கள், OIS மற்றும் 30X ஜூம் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ரெட்மி 10எக்ஸ் மற்றும் ரெட்மி 10எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்களில் டூயல் சிம் 5ஜி வசதி வழங்கப்படுகிறது.

புதிய ரெட்மி 10எக்ஸ் சீரிஸ் ரெட்மி நோட் 8 ப்ரோ போன்று எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என
ரெட்மி பிராண்டின் பொது மேலாளர் லு வெய்பிங் தெரிவித்து இருந்தார். இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் வைட், புளூ, கோல்டு மற்றும் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கும் என்றும் இவற்றில் சிவப்பு நிற பவர் பட்டன் வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க ரெட்மி 10எக்ஸ் மற்றும் ரெட்மி 10எக்ஸ் ப்ரோ மாடல்களில் 48 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இதில் ரெட்மி 10எக்ஸ் மாடலில் மூன்று பிரைமரி கேமராக்களும், ரெட்மி 10எக்ஸ் ப்ரோ மாடலில் நான்கு கேமரா சென்சார்களும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here