குடிபோதையில் வாகனம் ஓட்டிய 11 பேர் கைது

தலைநகரில் பல்வேறு பகுதிகளில் போலீஸார் மேற்கொண்ட சாலை தடுப்பு நடவடிக்கைகளில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜாலான் கிள்ளான் லாமா, ஹர்தாமாஸ், கெப்போங், ஜாலான் ஹங் துவா ஆகியவட்டாரங்களில் இரவு 9 மணி தொடங்கி 12 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் சாலை போக்குவரத்துச் 1987 சட்டம் செக்‌ஷன் 45A (1) பிரிவின் கீழ் விசாரிகப்படுவர் என்று கோலாலம்பூர் காவல் துறை தலைவர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாசிம் கூறினார்.

அதோடு தலைநகரில் செயல்படக் கூடிய மதுபானம் அருந்தும் கடைகள் எஸ்ஒபியை கடைப்பிடிக்கின்றனவா என்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில் சமூக இடைவெளி கடப்பாடு பின்பற்றப்படுகிறதா, இரவு 10 மணிக்கு கடைகள் மூடப்படுகிறதா உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

இதற்கிடையில் பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சாலை தடுப்பு நடவடிக்கைகளில் 73 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. அதில் குடிபோதையில் காரை ஓட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here