அரசியல் நடத்துகிறது கொரோனா

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பார்கள் . கெட்ட குடி என்பதில் குழப்பான பொருள் இருக்கும். ஆனாலும், இரண்டுமே சரியானதாக இருப்பதை உணரமுடியும். கேடுகளையே சந்தித்த குடி கெடும் என்பதும் கேடு நினைக்கின்ற குடியும் கெடும் என்றும் பொருள் கொள்ளலாமா?

கொரோனா என்ற சொல்லால் உச்சரிப்புக்கும் தொற்று வந்துவிட்டதுபோல் இருக்கிறது. இப்போது கொரோனா என்ற சொல் சிக்குன் குனியா என்றும் டிங்கி என்றும் உருமாற்றங்கள் பெற்றுவிட்டன.

தொற்று வரக்காரணம் மனிதத்தவறுகள் என்பதும் புரியும். தெரிந்தும் தவறுகள் நிகழ்கின்றன. தவற்றுக்குத் தவறுகள் தானே திரும்பக்கிடைக்கும்? உண்மைதானே, மனிதத்தவற்றினால் மனிதப் புனிதம் கெடுகிறது. கெட்டுக்கொண்டிருக்கிறது என்பதைக் கண்ணால் பார்த்து அறியக் கூடியதாக இருக்குகிறது.

ஒரு தவறு இன்னொரு தவற்றுக்கு வழியமைத்துக் கொடுத்துவிடுகிறது என்பதுபோல் கொரோனாவில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தபோது சிக்குன் குனியா, டிங்கி இரண்டும் கொரோனோவோடு இணந்திருக்கின்ற செய்திகளும் கிடைத்திருக்கின்றன.

மக்களின் எண்ணம் கொரோனாவின் மீதே பதிந்திருந்ததால் மற்ற இரண்டும் பின்புற வழியாக நுழைந்திருக்கின்றன.

இவை இரண்டும் மக்களின் பழைய எதிரிகள். கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தன. சந்தர்ப்பம் பார்த்து நுழைந்துவிடும் அரசியல் வாதிகள்போல் நுழைந்திருப்பதை கவனிக்காமல் விட்டால் இவை இரண்டும் கொரோனாவுடன் இணைந்து நான்காம் தரப்பு ஒன்றை உருவாக்கும் நாச வேலைக்குத் தயாரகிவிடும்.

ஆராய்ச்சியாளர்கள் கூறும் செய்தியும் இதுதான். ஒன்றிலிருந்து மற்றொன்று, அந்த இரண்டிலிருந்தும் வேறொன்று. இப்படியே புதுபுதுப்புது வைரஸ் கிருமிகள் உருவாகும் என்கிறார்கள் இதுதான் நடந்துவருகிறது.

இதுதான் உண்மையென்றால் சிக்குன் குனியா, டிங்கி கூட்டணி நான்காம் தரப்பு ஒன்றை உருவாக்கும் என்பதையும் மறுக்கமுடியாது. கொரோனாவும் அரசியல் நடத்துகிறது.

கொரோனா மீது கவனம் செலுத்தும்போதே சிக்குன் குனியா, டிங்கி இரண்டையும் மறந்துவிடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதே வேளை இவ்விரண்டுக்கும் மூலமான ஏடிஸ் கொசுவை அழித்தால்தான் நன்மை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here